இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சிறுவன்.. தட்டிக் கேட்டவரையும் அவரது மனைவியையும் தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்...
காரைக்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற சிறுவனை தட்டிக் கேட்டவரையும் அவரது மனைவியையும் தாக்கிய 10 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
எழில் நகரைச் சேர்ந்த கணபதி என்பவர் சாலையில் இருசக்கரவாகனத்தில் அதிவேகமாகச் சென்ற சிறுவனை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அந்த சிறுவன் தனது நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூறியதை தொடர்ந்து, அவர்கள் கணபதியின் வீட்டிற்கு சென்று கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், கார் கண்ணாடியையும், பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Comments