முதுமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை உடல்நலக் குறைவால் இறந்ததாக வனத்துறை தகவல்

0 270

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தாய் யானையை பிரிந்த குட்டி யானை உடல் நலக்குறைவால் உயிரிழக்க வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஒரு மாத த்துக்கு முன், உடல்நலக்குறைவால் கோவை மருதரமலை அடிவாரத்தில் குட்டியுடன் ஒதுங்கிய பெண் யானையை மீட்டு வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்தனர். அப்போது நலமுடன் துள்ளித் திரிந்த குட்டி யானை, வனத்துறையினர் கண்காணிக்க தவறியதால் இரவில் மாயமானதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

அதனை வனத்துறையினர் தேடி கண்டுபிடித்தாலும், அதற்குள் சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்ட தாய் யானையுடன் அதனை மீண்டும் சேர்க்க முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments