இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... ஒருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் படுகாயம்
மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டான் கிராமத்தில், வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி சென்ற ஈச்சர் லாரி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
பூம்புகார் சாலையில் நேரிட்ட இந்த விபத்தில் ஈச்சர் லாரி ஓட்டுனர் பாண்டியன் உயிரிழந்தார். அவருடன் பயணித்த முருகன், வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
Comments