சென்னை ஓட்டலில் தீவிரவாதி இஸ்திரி தொழிளாளியாக பதுங்கல் போலீசில் வசமாக சிக்கியது எப்படி ? சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதா ?

0 1160

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இஸ்திரி போடும் தொழிலாளியாக பதுங்கி இருந்த அன்சர் அல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை மேற்குவங்க போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

சென்னை கோயம் பேட்டில் உள்ள கிராண்ட் டவர் ஓட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளி போல பதுங்கி இருந்த
மேற்குவங்க மாநிலம், புர்பா பர்தமான்மாவட்டத்தை சேர்ந்த அனோகர் என்பவரை சென்னை போலீசார் உதவியுடன் மேற்கு வங்க மாநில தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அனோகர், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் எனவும், 'அன்சர் அல் இஸ்லாம்' என்ற தீவிரவாத அமைப்பில் முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதியை விசாரித்த போது, அவர் தலைமறைவாக உள்ள தனது கூட்டாளி அனோகர் சென்னை ஓட்டலில் தங்கியிருப்பதாக வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

அந்த ஹோட்டலில் கடந்த 6 மாதமாக இஸ்திரி போடும் தொழில் செய்து வந்த அனோகர் மீது இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல் , தாக்குதல் நடத்த திட்டமிடுதல், அரசுக்கு எதிராக சட்ட விரோத செயல் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments