கடலூரில் விஷச்சாராய சாவுகளுக்கு மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்ட கவுன்சிலர்கள்

0 388

கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பதிலுக்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து சாராய சாவுகளுக்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் எனக் கூறினர். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது, இடையில் புகுந்த பாமக கவுன்சிலர் ஒருவர், தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகியதற்கு இரண்டு கட்சிகளுமே காரணம் எனக் குற்றம்சாட்டினார். அப்போது அவரிடமிருந்து அதிமுக கவுன்சிலர் மைக்கை வாங்க முயன்றார். பாமக கவுன்சிலர் கொடுக்க மறுக்கவே, அதிமுக கவுன்சிலர் மைக்கை வெடுக்கென்று பறித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments