தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
சம்பா உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள நாகை விவசாயிகள்... விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத நிலையில் சம்பா உழவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டிராக்டர்களில் வயல்களை சீரமைத்தல், பாசன வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கவும் உழவு மானியம் உள்ளிட்ட சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments