தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
சாலை விபத்துகளைத் தவிர்க்க தெலங்கானா போலீசாரின் புதுமையான முயற்சி
சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதைத் தடுக்கவும், தெலங்கானா மாநில போலீசார் புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், போக்குவரத்து வாகனம் மற்றும் காவலர் நிற்பது போன்ற 3டி முறையில் தயாரிக்கப்பட்ட பிளைவுட்டை, அதிக விபத்துகள் ஏற்படும் பகுதியில் போலீசார் அமைத்துள்ளனர்.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது, உண்மையாகவே ரோந்து வாகனத்துடன் போலீஸ்காரர் நிற்பது போல் தெரிவதால், வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து விபத்து ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Comments