நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் வாயை கடித்து குதறிய தெருநாய்.. மகனை மீட்க வந்த தந்தைக்கும் நாய்க்கடி
காஞ்சிபுரம் அடுத்த பல்லூர் அருகே வீட்டிற்கு பின்புறம் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 5 சிறுவனின் வாயை தெருநாய் ஒன்று கடித்துக் குதறியதால் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் நிர்மல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துள்ளது.
மகனின் அலறல் சத்தத்தை கேட்டு வெளியே வந்து குழந்தையை மீட்க முயற்சித்த போது பாலாஜியையும் தெருநாய் கடித்ததாக கூறப்படுகிறது.
Comments