பள்ளி மாணவியை மறித்து கஞ்சா குடிக்கிகள் அட்டூழியம்.. தட்டிக்கேட்டதால் சிசிடிவி உடைப்பு..! போலீஸ் பிடியில் இருந்தும் அட்டகாசம்

0 930

சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் டியூசன் சென்ற பள்ளி மாணவியை கஞ்சாபோதையில் மடக்கி வம்பு செய்த இரு இளைஞர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த நிலையில், போலீசார் முன்னிலையில் போதை இளைஞர் ஒருவர் , சிசிடிவி காமிராக்களை அடித்து உடைத்து இழுத்து போட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

காட்டுப்பாக்கத்தில் பள்ளி மாணவியிடம் வம்பு செய்ததால் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கப்பட்ட கஞ்சாகுடிக்கி ஒருவன், தலையால் முட்டி கம்பத்தை பிடித்து சாய்த்து சிசிடிவி காமிராக்களை இழுத்து உடைத்து அட்டகாசம் செய்த காட்சிகள் தான் இவை..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் இந்திரா நகரில் சம்பவத்தன்று மாலை பள்ளி மாணவி ஒருவரை இரு சக்கரவாகனத்தில் அரைக்கால் சட்டை அணிந்து பரட்டை தலையுடன் சுற்றிய இரு இளைஞர்கள் மறித்து பேசும் படி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த பெண் ஒருவர் , மாணவியை காப்பாற்ற தனது வீட்டுக்காரரை அனுப்பி வைக்க அவர் சென்று அந்த இரு இளைஞர்களிடமும் என்ன பிரச்சனை என்ரு கேட்டதாக கூறப்படுகின்றது. இதனை பயன்படுத்தி அந்த மாணவி அங்கிருந்து நைசாக தப்பிச் சென்று விட்டார். இதனை கண்ட இரு அரைக்கால் சட்டை பாய்ஸும் தட்டிக்கேட்டவரிடம் தகராறு செய்தனர்.

அங்குள்ள குடியிருப்பு வாசிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அதில் ஒருவனை ஓடவிடாமல் சட்டையை பிடித்து மடக்கி வைத்திருந்த நிலையில் , என்ன அசிங்கபடுத்தாதீங்க, நான் யார் தெரியுமா ? என்று சைக்கோ மாதிரி பேசிக் கொண்டே சிசிடிவி காமிரா பொறுத்தப்பட்ட கம்பத்தை முட்டி தள்ளி கையால் இழுத்து கேமராக்களை உடைத்தான்

அவனை கட்டுப்படுத்த இயலாமல் தவித்த போலீசார் அவனை படுக்க வைத்து கைகளை கட்டினர்

அதற்குள் அங்கிருந்த குடியிருப்பு வாசிகளை கஞ்சா குடிக்கி இளைஞர் பகிரங்கமாக மிரட்டினான். தான் ஜெயிலுக்கு சென்ரு வந்ததும் பார்த்துக் கொள்கிறேன் என்றபடி அங்கிருந்து சென்றான்.

இதே தெருவில் கடந்த 17ந்தேதி கஞ்சாகுடிக்கி இளைஞர்கள் இரு குழுவாக கத்தியுடன் மோதிக் கொண்டனர். இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளித்தும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளபடவில்லை என்கின்றனர் குடியிருப்பு வாசிகள்

அதே போல மணலி சாத்தங்காடு பகுதியில் கஞ்சா போதையில் சாலையில் ஆட்டம் போட்ட இளைஞர்கள் வாகன ஓட்டிகளை மறித்து தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடித்து எங்கிருந்து கஞ்சா வாங்குகிறார்கள் என்பதை விசாரித்து அதனை தடுக்க போலீசார் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments