தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
சென்னை மயிலாப்பூரில் சார்ஜ் போட்டபடி மனைவியுடன் செல்போனில் பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
சென்னை மயிலாப்பூரில் சார்ஜர் போட்டு கொண்டே செல்போனில் பேசிய அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நேபாளத்தை சேர்ந்த கணேஷ் தாப்பா என்பவருக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் இரவு பணிக்கு வந்த அவர் சார்ஜ் போட்டுக்கொண்டே மனைவியிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென்று கணேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
மார்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்த காயம் இருப்பதாக கூறிய போலீசார் அவர் தங்கிய அறைக்கு அருகே மோட்டார் அறையில் மின்சார வயர்கள் சரிவர பராமரிக்காததும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
Comments