தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
வனப்பகுதியில் மரங்களை வெட்டிக் கடத்துவோரிடம் லஞ்சம்... வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மூர்த்தி விளக்கம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்று வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலர் மூர்த்தி தனது பர்சில் வைப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரேஞ்சருக்கு மட்டும்தான் கொடுப்பீர்களா, நாங்கள் ஸ்க்வாடு எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என அவர் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மூர்த்தி, தனக்கு ஆகாதவர்கள் தவறாக சித்தரித்து வீடியோவை எடுத்திருக்கலாம் எனக் கூறினார்
Comments