தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை வைத்து அ.தி.மு.க அமளி... இன்று ஒருநாள் மட்டும் வெளியேற்றப்பட்டால் போதுமானது - முதலமைச்சர்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இன்றும் கோஷம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க சபாநாயகர் தடைவிதித்தார்.
பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது, விஷச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனால், அதிமுக எம்.எல்.ஏக்களை இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்தால் போதும் என முதலமைச்சர் கோரியதை அடுத்து, அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
Comments