நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மலைச்சாலைத் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வந்த லாரி... ஓட்டுநர் கட்டுப்படுத்தி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வீரணமலை, மலைச் சாலையின் வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ இருந்த லாரியை ஓட்டுநர் சாதுரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்திரப் பிரதேசத்திலிருந்து துவரம்பருப்பு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கி பள்ளத்தை நோக்கி நின்ற நிலையில் ஓட்டுநர் இம்ரானும், கிளீனரும் கீழே இறங்கி உயிர் தப்பியுள்ளனர். 2 ஜேசிபிகள் மூலம் லாரி மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக அம்பலூர் போலீசார் தெரிவித்தனர்.
Comments