விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காகவே இட ஒதுக்கீடு விவாதம்... பா.ம.க கோரிக்கை குறித்து அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

0 267

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய ஜி.கே. மணி, அருந்ததியருக்கு வழங்கப்பட்டது போல வன்னியர்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் சிவசங்கர், ஏற்கனவே அரசு பணிகளில் அதிகளவில் வன்னியர்கள் இருக்கும் நிலையில்10.5% இட ஒதுக்கீடு அவர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடும் என்றார்.

இந்த உண்மை தெரியாமல் பாமக புலிவாலைப் பிடித்ததை போன்று இட ஒதுக்கீட்டை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார். இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கே உரிமை உள்ளது என்ற தனது வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் அமைச்சர்கள் அவையில் அரசியல் பேசுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments