சாலையில் அழுதபடி நின்றிருந்த 8 வயதுச் சிறுவன்.. பெற்றோரை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்த போலீசார்
தென்காசியில் இலஞ்சி சாலையில் உள்ள பல்க்முக்கு பகுதியில் அழுதபடி நின்றிருந்த 8 வயதுச் சிறுவனை பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு விசாரித்தனர்.
சரியான தகவல் கிடைக்காத நிலையில், சிறுவனின் புகைப்படத்தை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி விசாரித்ததில், அவன் கடையத் தெருவைச் சேர்ந்த சாகுல் என்பவரின் மகன் முஷ்கின் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு அவர்களிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர்.
Comments