சாராயத்தில் அதிகளவு மெத்தனாலை கலந்த கெமிக்கல் எஞ்சினியரிங் படிப்பை பாதியில் விட்டு வந்த இளைஞன்

0 614

கள்ளக்குறிச்சியில் 56 பேரை பலி வாங்கிய விஷச்சாராய சம்பவத்தில் கைதாகியுள்ள மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், சாராயத்தில் அதிகளவு மெத்தனாலை கலப்பதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்ட மாதேஷ், ரசாயனக் கலவைகள் குறித்து தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் கூட்டாளிகளிடம் பில்டப் விட்டிருக்கிறான்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள 12 பேரில் கோவிந்தராஜ் மற்றும் சின்னதுரையிடம் மெத்தனாலை கலந்தால் சாராயம் காட்டமாக இருக்கும் எனக் கூறி, அதிகளவு கலக்க வைத்தது மாதேஷ்தான்என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சிவக்குமாருடன் கூட்டு வைத்துக்கொண்டு, பாரல் பாரலாக மெத்தனாலை மாதேஷ் வாங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 பேரல் மெத்தனாலை சிவக்குமார் அனுப்பியுள்ளதாகக் கூறும் போலீசார், அவற்றை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments