கோவில் படிகளில் மயங்கி விழுந்த பெண் மருத்துவர்.. நீட் தேர்வு ரத்தானதால் மன அழுத்தத்தில் மயங்கியதாக தகவல்...
திருச்சி மலைக்கோட்டையில் சாமி தரிசனம் செய்ய வந்த சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் மோனிஷா திடீரென மயங்கி விழுந்தார்.
எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் மேற்படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வு எழுத பெற்றோருடன் திருச்சி வந்துள்ளார்.
தேர்வு ரத்தானதையடுத்து மலைக்கோட்டை உச்சிப்பிளையார் கோயிலுக்குச் சென்று படிகளில் ஏறும் போது திடீரென மயங்கி விழுந்தார்.
தாமதமாக 2 மணி நேரத்திற்கு பின்னர் வந்த தீயணைப்பு மீட்பு படையினர் மயங்கி கிடந்த மோனிஷாவை போர்வை ஒன்றில் டோலி போல் உட்கார வைத்து கீழே தூக்கி வந்தனர்.
சுயநினைவு திரும்பிய மோனிஷாவுக்கு முதலுதவி அளித்து ஆசுவாசப்படுத்தி ஆட்டோ ஒன்றில் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Comments