சாலையோர குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து.. 3 பெண்கள் உயிரிழப்பு, 1 பெண் படுகாயம்
திருச்செந்தூர் அருகே முக்காணியில் சாலையோரத்தில் அடுத்தடுத்து இருந்த 2 குடிநீர்க்குழாய்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மணிகண்டன், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடனடியாக அப்பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments