நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
நிலத்தை சமன்படுத்த வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள்.. 20 வீடுகளில் விரிசல் - போலீஸ் விசாரணை
ஈரோட்டை அடுத்த சித்தோட்டில், குடியிருப்புகள் நிறைந்த பாரதிபுரம் பகுதியில் பாறைகளுக்கு வெடி வைத்ததால் அருகே புதிதாக கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சண்முகராஜா என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சமன்படுத்துவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பாறைகளுக்கு வெடி வைத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments