விஷ சாராய மரண வழக்கில் அடுத்தடுத்து தொடரும் கைது நடவடிக்கை.. மெத்தனால் சப்ளை செய்த மொத்த வியாபாரி சென்னையில் கைது
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில், சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனாலை சப்ளை செய்த மாதேஷிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவருக்கு மெத்தனாலை விற்ற சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம் அருகே வட பெரும் பக்கத்தில் கெமிக்கல் குடோனில் மெத்தனால் பேரல்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைதான 4 பேருக்கும் சிவக்குமார் தான் மெத்தனால் சப்ளை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோன்று மாதேஷுக்கு மெத்தனால் கடத்த உதவி புரிந்ததாக பண்ருட்டியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேல், கள்ளக்குறிச்சி மீன்வியாபாரி கண்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சக்திவேலின் ஜிஎஸ்டி பில்லை பயன்படுத்திதான், மாதேஷ் ‘மினரல் டர்பன்டன் ஆயிலை வாங்கியுள்ளார். அதிக போதைக்காக இதை சாராயத்தில் கலந்ததும் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Comments