மின்விசிறியை இயக்க ப்ளக் மாட்டியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. காப்பாற்றச் சென்ற சிறுவனின் தாத்தாவும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வயலூரில் வீட்டில் மின்சாரம் தாக்கி தாத்தாவும் பேரனும் உயிரிழந்தனர்.
மின்விசிறியை இயக்க 15 வயது சிறுவன் திருக்குமரன் Flug மாட்டியபோது மின்சாரம் தாக்கி துடித்ததைக் கண்டு காப்பாற்ற முயன்ற அவனது தாத்தா சீனிவாசன் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருவரையும் காப்பாற்ற முயன்ற சிறுவனின் தாய் ரேவதியையும் மின்சாரம் தாக்கிய நிலையில், மெயின் சுவிட்சை திருக்குமரனின் தந்தை ஆஃப் செய்ததால் ரேவதி உயிர் பிழைத்தார்.
Comments