தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
எலான் மஸ்க், தனது நிறுவன ஊழியரான காதலி மூலம் 11ஆவது குழந்தையைப் பெற்றிருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தகவல்
எக்ஸ் சமூக வலைத்தளம், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க், தனது நிறுவன ஊழியரான காதலி மூலம் 11ஆவது குழந்தையைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் மூலம் 5 குழந்தைகளும் பாடகி கிரிம்ஸ் மூலம் 3 குழந்தைகளும் உள்ளன.
தனது நியூராலிங்க் நிறுவன ஊழியரும் காதலியுமான ஷிவோன் ஜிலிஸ் 2021 ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பெற்றிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருப்பதாக பொருளாதார ஊடகமான ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
Comments