தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
"பா.ஜ.க போராட்டத்துக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" - அண்ணாமலை
கள்ளச்சாராய விவகாரத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த பாஜகவுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய அண்ணாமலை, தி.மு.க.வுக்கும் கள்ளச்சாராயத்திற்கும் உள்ள தொடர்பு தெரியவந்துவிடும் என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற அனுமதி பெற்று போராட்டம் கண்டிப்பாக நடத்துவோம் என்றார்.
போராட்டத்துக்கு அனுமதி அளிக்காதது குறித்து தாம் ஆளுநரிடம் போனில் பேசியதாகவும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த ஒரு குழு அவரை நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
Comments