வெளிமாநில தொழிலாளர்களுக்கும் அரசு உதவிகள் வழங்கப்படுகிறது - சி.வெ.கணேசன்
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கல்வி,. மகப்பேறு, திருமணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
இம்மாதம் 20ஆம் தேதிப்படி 2 ஆயிரத்து 660 வெளி மாநில தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாகவும், வெளி மாநில தொழிலாளர் இறந்தால் அவர்களின் உடலை சொந்த மாநிலத்திற்கு விமானம் அல்லது ஆம்புலன்சில் எடுத்து செல்ல 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments