நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், திமுக அரசைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம், கோட்டை மைதானம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்த போலீசாருடன் பா.ஜ.கவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் பேரணியாக வந்த பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராம் நகரில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Comments