அரியர்ஸை முடிக்க சொல்லி வற்புறுத்திய தாயையும், தம்பியையும் கொலை செய்த இளைஞர் கைது

0 474

அரியர்ஸை முடிக்க சொல்லி வற்புறுத்திய தாயையும், தம்பியையும் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்து பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துவிட்டு, தப்பியோடி தலைமறைவான இளைஞரை போலிசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த முருகன் ஓமன் நாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அக்குபஞ்சர் தெரப்பிஸ்டாக பணியாற்றும் அவரது மனைவி பத்மா இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பத்மாவின் அக்கா மகள் மகாலட்சுமியின் வீட்டு வாசலில் சாவி மற்றும் செல்போனை ஒரு பையில் வைத்துவிட்டு, நாங்கள் 3 பேரும் போகிறோம், வீட்டு கதவை திறந்து பாருங்கள் என குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இன்று அதிகாலை குறுஞ்செய்தியை பார்த்த மகாலட்சுமி பத்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பத்மாவும், இளைய மகன் சஞ்சய்யும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து திருவொற்றியூர் கடற்கரை அருகே நித்தீஷை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பை முடித்த நித்தேஷ் 14 அரியர் வைத்திருந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், தாயும் இதுகுறித்து தொடர்ந்து கண்டித்ததால் தாயை, தம்பியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக நித்தேஷ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவே இருவரையும் கொலை செய்த நித்தேஷ், பயத்தின் காரணமாக தற்கொலை செய்யாமல் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments