ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம்...
திருமலை ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் 24 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் மூன்று மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும், இலவச தரிசன வரிசையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருப்பதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று சுமார் 63 ஆயிரம் பேர் தரிசனம் செய்ததாகவும், உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 23 லட்ச ரூபாய் கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments