ஏடிஎம் மையத்தில் இளைஞர் தவறவிட்ட பர்சிலிருந்த ரூ.3000 பணத்துடன், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.25,000 திருடியவனை தீவிரமாக தேடும் போலீசார்

0 544

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஏடிஎம் மையத்தில் பர்சைத் தவறவிட்டவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணத்தைத் திருடியவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி காந்தி சிலை அருகிலுள்ள டாடா ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காகச் சென்ற கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது பர்சை ஏடிஎம் இயந்திரம் மீது வைத்துவிட்டு மறந்து சென்றுள்ளார்.

காலை 11.25 மணியளவில் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற இளைஞன் ஒருவன், 3 ஆயிரம் ரூபாயுடன் அந்தப் பர்சை எடுத்துக் கொண்டு, கிருஷ்ணமூர்த்தியின் ஆதார் அட்டையிலிருந்த பிறந்ததேதியைப் பயன்படுத்தி, அவரது கணக்கிலிருந்த 25 ஆயிரம் ரூபாயையும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments