புகையால் ஏற்பட்ட பகையில் கூலி தொழிலாளியை கம்பியால் அடித்து கொன்ற இன்ஸ்டா ஜோடி

0 724

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே புகையால் ஏற்பட்ட பகையில் கூலி தொழிலாளியை கம்பியால் அடித்து கொன்ற இன்ஸ்டா ஜோடி கைது செய்யப்பட்டனர்.

செட்டியார்மடத்தைச் சேர்ந்த அமுதா, தனது 2 வது கணவர் நவநீதகிருஷ்ணனுடன் சேர்ந்து வீட்டின் முன் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோபியா தனது வீட்டின் முன் கிடந்த குப்பைகளை பெருக்கி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட புகையால் சோபியாவுக்கும், அமுதாவுக்கும் தகராறு ஏற்பட்டள்ளது. இதையடுத்து இருவருக்கும் ஆதரவாக கணவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அமுதாவின் கணவர் நவநீதகிருஷ்ணன் தாக்கியதில், சோபியாவின் கணவர் ஜெகதீசன் தலையில் காயமடைந்து இறந்ததாக கூறப்படுகிறது. சோபியா கொடுத்த புகாரில், நவநீதகிருஷ்ணன், அமுதாவை போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments