இருசக்கர வாகனம் எதிரே வந்த மினிலாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி.. தலைக்கவசம் அணியாததே உயிரிழப்பிற்கு காரணம் என தகவல்..
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் என்ற இடத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் இன்று இருசக்கர வாகனம் ஒன்றில் பூம்புகார் சாலை வழியாக கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மணக்குடி என்ற இடத்தில் முன்னே சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த ஈச்சர் மினி லாரி மீது இருச்சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த வினோத் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் பின்னால் அமர்ந்து வந்த 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
ஒரே வாகனத்தில் 3 பேர் பயணித்தது மட்டுமின்றி தலைக்கவசம் அணியாமல் இருந்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
Comments