என்ன சொல்றீங்க மேடம்... கேப்டன் பாம்பாக வந்தாரா..? தேமுதிக அலுவலகத்தில் சுவாரஸ்யம்

0 1213

சென்னை தேமுதிக அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்த நிலையில் மறைந்த விஜயகாந்த் தான் நல்ல பாம்பு உருவத்தில் அலுவலகம் வந்ததாக தேமுதிகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியை கோவிலாக கருதி தேமுதிகவினர் பூஜை செய்து நாள் தோறும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை வேளையில் தேமுதிக அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்ததாக கூறப்படுகின்றது.

அது படம் எடுத்த படியே விஜயகாந்த் அமரும் அறையை நோக்கிச்சென்ற தால் வந்திருப்பது கேப்டன் என்று அங்கிருந்த தேமுதிகவினர் கட்சியின் தலைவர் பிரேமலதாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறிது நேரம் அலுவலகத்திற்குள் பதுங்க இடமின்றி சுவற்றோரம் தவழ்ந்த அந்த நாகப்பாம்பு, பின்னர் அங்கிருந்து வெளியேறியது.

செவ்வாய்க்கிழமை என்பதால் விஜயகாந்த் பாம்பு உருவத்தில் அலுவலகம் வந்து சென்றதாக தேமுதிகவின் அதிகார செய்தி தளத்தில் தகவல் பதிவு வெளியிடப்பட்டது. வாழும் போது வள்ளலாக புகழப்பட்ட விஜயகாந்த், மறைவிற்கு பின்னர் பாம்பாக வந்து சென்றதாக தகவல் பரவிய நிலையில் அவரது நினைவிடத்துக்கு கூடுதல் தொண்டர்கள் வந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments