2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பாட்டி, ஒன்றரை வயது பேத்தி உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே இரு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாட்டி மற்றும் ஒன்றை வயது பேத்தி உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ரேவதி என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து, குழந்தை நிகாஸ்ரீ உடன் தாய் வீட்டில் இருந்துள்ளார்.
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் நேற்று பாட்டி அன்பரசி, உறவினர் தண்டபாணி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு சென்ற போது திருமழிசை சிப்காட் அருகே சாலையை கடக்க வந்த வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
அன்பரசி மற்றும் நிகாஸ்ரீ இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த நிலையில், மற்றொரு வாகன ஓட்டியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments