நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கிருஷ்ணகிரி சாலையில் நடந்த கார் விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், காரை முந்திச் செல்ல முயன்ற அரசுப் பேருந்து உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி இரு முறை சுழன்று சாலையின் மறுபுறம் விழுந்தது. கார் சுழன்றதில் கண்ணாடி உடைந்து வெளியே விழுந்த சிறுவன் மீது எதிரே வந்த மற்றொரு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் முகமது பயாஸ், குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊரான வாணியம்பாடிக்கு வந்து விட்டு திரும்பி சென்ற போது அங்கிநாயனப்பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் முகது பயாஸ், அவரது மனைவி மற்றும் மகள் என 3 பேரும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments