நெல் கொள்முதலுக்கு ரூ.16,620/- லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடமிருந்து 16 ஆயிரத்து 620 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் ஜெகதீசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
ஒரு மூட்டை நெல் கொள்முதலுக்கு 40 ரூபாய் வீதம் ஜெகதீசன் லஞ்சம் கேட்டதாக அம்பட்டையம்பட்டியை சேர்ந்த முருகன் அளித்த புகாரையடுத்து, ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிய ஜெகதீசனை கையும் களவுமாக பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments