சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்தவர் கைது

0 552

சினிமா தயாரிப்பாளரும், கட்டுமான தொழிலதிபருமான பாஸ்கரன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தரகர் என்று கூறப்படும் கணேசன் என்ற அந்நபர், 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதாகி, 2023 ஜனவரியில் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன் பின் வழக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகாமால் தலைமறைவானார்.

மேல்மலையனூர் கோயில் அருகே பகல் நேரத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டே இரவு நேரத்தில் சாமியார் போன்ற தோற்றத்துடன் கணேசன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை போலீசார் அங்கு சென்று கணேசனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments