தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை நுழைவாயிலில் இருந்த ஆலமரம் முறிந்து விழுந்தது
நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை நுழைவாயிலில் இருந்த ஆலமரம் முறிந்து விழுந்தது.
மருத்துவமனைக்கு வருபவர்கள் மாற்றுவழி பாதையாக 2 ஆவது நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்டனர். மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சென்னை சின்னமலையில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
Comments