மது போதையில் சாலை ஓரம் படுத்துறங்கியவர் மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு...

0 619

சென்னை பெசன்ட் நகரில் மது போதையில் இருந்ததாக கூறப்படும் இரு பெண்கள் ஓட்டி வந்த சொகுசு கார், சாலையோரம் மது போதையில் படுத்துறங்கியவர் மீது ஏறியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வரதராஜ் சாலை நடைபாதை அருகே நேற்று பிற்பகல் சுமார் 3 மணி அளவில் பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று, 22 வயதான சூர்யா என்பவர் மீது ஏறி இறங்கியுள்ளது.

விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து காருடன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

வீடியோ ஆதாரங்கள் இருந்தும் தப்பியோடிய பெண்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனக்கூறி இளைஞரின் உறவினர்கள் பெசன்ட் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments