செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சராகி சாலையோரம் நின்ற கார் மீது மோதிய கார்...
செங்கல்பட்டு அருகே திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
துபாயில் வேலை செய்யும் மயிலாடுதுறை மாவட்டம், ஆணைமலநல்லூரை சேர்ந்த இய்யாதீன் பக்ரீத் பண்டிகைக்காக 15 நாள் விடுமுறையில் வந்து மீண்டும் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சந்துரு என்பவரின் வாடகை காரில் நண்பர்கள் அன்வர்சாதிக், ஐயப்பன் ஆகியோருடன் நேற்றிரவு கிளம்பியுள்ளார்.
இன்று காலை செங்கல்பட்டு பழவேலி பகுதியில் டயர் பஞ்சரானதால் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு சந்துருவும், இய்யாயுதீனும் டிக்கியில் இருந்த ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கியை எடுத்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியது.
இதில், சந்துரு, இய்யாயுதீன் உயிரிழந்தனர். சாலையில் வரும் மற்ற வாகனங்களை எச்சரிக்கும் முகமாக, ஐயப்பனும், அன்வர்சாதிக்கும், மரக்கிளைகளை உடைக்க சென்றதால் உயிர் தப்பினர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் நம்பர் பிளேட் கிடைத்த நிலையில் பதிவெண்ணை கொண்டு கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments