தெருவில் நடந்து சென்ற பெண்ணை முட்டிய எருமை மாடு.. சென்னையில் பயங்கரம்

0 386

சென்னை திருவொற்றியூரில் கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எருமை மாடு கொம்பில் முட்டி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்து மாட்டை விரட்டிச் சென்ற மேலும் 2 பேரையும் எருமை முட்டியது. பின்னர் எருமை அங்கிருந்து சாவகாசமாக நடந்து சென்றதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments