நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
அரசு பேருந்தில் இருந்து ஓட்டுநர், நடத்துநர் இறக்கி விட்டதாக கிராமிய கலைஞர் புகார்
நாட்டுப்புறக் கலை பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி மறுத்து ஓட்டுநரும் நடத்துனரும் தன்னை அவதூறாக பேசி, பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக நாட்டுப்புறக் கலை பயின்று வரும் மாணவரான ஆகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை இசை கல்லூரியில் படிக்கும் ஆகாஷ், நேற்றிரவு கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை செல்வதற்காக பேருந்தில் ஏறியபோது, கலை பொருட்கள் இடித்து விளக்கு உடைந்து விட்டால் யார் பொறுப்பேற்பார்கள் எனக் கூறி ஓட்டுநரும், நடத்துநரும் அவரை கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
Comments