திருட்டு வழக்கில் கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் கைது...

0 413

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே திருட்டு வழக்கில் சிறையிலிருந்தவர்களுடன் சேர்ந்து நகை திருடியதாக வழக்கில் கடலூர் மத்திய சிறை தலைமை காவலர் ஞானமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொப்பையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமணியின் எதிர்வீட்டில் 72 வயது மூதாட்டி ஒருவர் தனியே வசித்து வருகிறார்.

அவரது வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்த ஞானமணி, சிறையிலிருந்து வெளியே வந்த குற்றவாளிகள் சிலரை சேர்த்துக்கொண்டு, நள்ளிரவில் மூதாட்டி உறங்கும் நேரம் பார்த்து 57 சவரன்நகையை திருடியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஞானமணியுடன் சேர்த்து 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments