நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு சந்தனக் கட்டைகள் கடத்திய 6 பேர் கைது.. 20 கிலோ சந்தன எண்ணெயும் பறிமுதல்...
கேரளாவில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுகொண்டிருந்த பார்சல் லாரியை சேலம் அருகே மகுடஞ்சாவடியில் வனத்துறையினர் சோதனை நடத்தி, ஒன்றரை டன் சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்ததுடன், 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், புதுச்சேரி வில்லியனூரில் சந்தன எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் சோதனை நடத்தி 215 சாக்கு மூட்டைகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள், சந்தன மரத்தூள்கள், 20 கிலோ சந்தன எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து சேலத்தில் உள்ள வனத்துறை கிடங்குக்கு கொண்டுசென்றனர்.
Comments