தமிழக எம்.பி.க்களை கேள்வி கேட்பவர்கள் 'வெயிட் அண்டு ஸீ': முதலமைச்சர்
40 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வதால் என்ன பயன் என்று கேட்பவர்கள் வெயிட் அண்ட் ஸீ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
40 தொகுதிகளிலும் வெற்றி தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
அதில் நிறைவுரையாற்றிய முதலமைச்சர், மக்களவை தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி தி.மு.க. அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள திருப்திக்கு கிடைத்த வெற்றி என்றார்.
Comments