ஜி-7 மாநாட்டில் பங்கேற்று விட்டு நாடு திரும்பிய பிரதமர்... .
ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். இந்தாண்டு ஜி-7 அமைப்பின் தலைமை வகிக்கும் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி விடுத்த அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ஃபிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினார்.
மாநாடு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், தலைவர்களுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் நாடு திரும்பிய பிரதமர் பதிவிட்டுள்ளார்.
எதிர்கால தலைமுறையினருக்கான சிறந்த உலகத்தை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments