பா.ஜ.க நிர்வாகி கணவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் சரண்

0 262

சென்னை திருமங்கலத்தில் பா.ஜ.க மகளிரணி மாநில நிர்வாகி நதியாவின் கணவர் சீனிவாசனை வெட்டிக் கொல்ல முயன்றதாக 6 பேர் போலீஸில் சரணடைந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தின் திடுக்கிட வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் 4 பேர் சேர்ந்து சீனிவாசனை பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தாக்குதலுக்கு ஆளான சீனிவாசன், சரணடைந்த 6 பேரில் ஒருவரான பிரசாந்த் என்பவரின் உறவினர் கொலை தொடர்பாக கைதாகி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.

உறவினர் கொலைக்கு பழிவாங்க பிரசாந்த் ஆட்களை திரட்டி வந்து தாக்கினாரா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments