பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு சரியாக மூடாத நிலையில் அடுத்தடுத்து மண்ணில் சிக்கும் வாகனங்கள்

0 389

சென்னையை அடுத்த பல்லாவரம் - அனகாபுத்தூர் பிரதான சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும், சாலை சீர் செய்யப்படாததால் அந்த வழியாகச் சென்ற வாகனங்களின் டயர்கள் அடுத்தடுத்து மண்ணுக்குள் சிக்கிக் கொண்டன.

நேற்றிரவு மணல் லாரியின் சக்கரம் மண்ணுக்குள் புதைந்து பக்கவாட்டில் கவிழ்ந்து அவ்வழியே சென்ற ஆட்டோ மீது விழுந்த நிலையில் இன்று அரசுப்பேருந்து, வேன் ஆகியவை மண்ணில் சிக்கின. வேனை மீட்க வந்த ஜேசிபி வாகனத்தின் சக்கரமும் சிக்கியது. அடுத்தடுத்த சம்பவங்களால், பம்மல் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments