சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கு... மகன் ஹன்டர் பைடனை மன்னித்து விட்டுவிட மாட்டேன் : ஜோ பைடன்

0 476

சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹண்டர் பைடனை மன்னித்து விட்டுவிட மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

ஹண்டர் பைடன், தனக்கு கொக்கைன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளி என கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments