தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு வாடகை வீடு விவகாரத்தில் இருதரப்பும் சமரசம் ஏற்பட்டதாக கூறி முடித்துவைப்பு
சென்னை போயஸ்தோட்டத்தில் தாம் குடியிருந்த வீட்டை நடிகர் தனுஷ் வாங்கிவிட்டதாகவும், இதனால், உடனடியாக காலி செய்யும்படி தனுஷ் தரப்பினர் மிரட்டுவதாக அஜய் குமார் லூனாவத் என்பவர் தாக்கல் செய்தவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
கடந்த ஆண்டு ஜனவரி வரை ஒப்பந்தம் இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதமே முன்னறிவிப்பு இல்லாமல் வீட்டை காலி செய்ய கூறியது சட்டவிரோதம் என்று அஜய் குமார் லூனாவத் மனுவில் கூறியிருந்தார். வழக்கு விசாரணையில், இருதரப்பும் சமரசமாகிவிட்டதாக கூறியதை அடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
விசாரணையில் நடிகர் தனுஷ் காணொளி வாயிலாக ஆஜராகி இருந்தார்
Comments