பற்றி எரிந்த கட்டிடம்..! பறி போன 50 உயிர்கள்..!! கருகிய 7 தமிழர்கள்..! குவைத்தில் நேரிட்ட விபரீதம்..!!

0 954

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காஃப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இதில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் பலர் தங்கி இருந்தனர். கட்டிடத்தின் காவலாளி அறையில் புதன் அதிகாலை தீப்பிடித்தது.

தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும், அதில் 7 பேர் தமிழர்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் ராம கருப்பன், தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி வீராசாமி மாரியப்பன், கடலூர் மாவட்டம் முட்டம் சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முகமது ஷெரீப், திருச்சி ராஜூ எபிநேசர், தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூர் புனாஃப் ரிச்சர்டு ராய், சென்னை ராயபுரம் சிவசங்கர் ஆகியோர் பலியான தகவல் அறிந்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

45 இந்தியர்களின் உடல்களுடன் இந்திய விமானப்படையின் சூப்பர் ஹெர்குலெஸ் விமானம் கொச்சிக்குப் புறப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments