குட்கா விற்பனை செய்த 89 கடைகளுக்கு சீல்.... அபராதம் விதித்து 3 மாதம் கடை திறக்க அனுமதி மறுப்பு...
ஒசூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து குட்கா விற்பனை செய்த 89 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
கடைகளுக்கு 25 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து 3 மாதங்கள் கடை திறக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்படாது என அறிவிப்பு நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது.
Comments